“வருகிறான் சோழன்” – மீண்டும் சோழர்களின் வருகையை எதிர்பார்க்கும் தமிழர்கள்.. வெளியானது பொன்னியின் செல்வன் 2 : புதிய UPDATE..!

Author: Vignesh
28 December 2022, 4:30 pm
ps 2 - updatenews360
Quick Share

பாதி கற்பனை, மீதி நிஜக்கதை என கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலக அளவிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது பொன்னியின் செல்வன். சிலர் இப்போதே இரண்டாம் பாகத்தை வெளியிடுங்கள் என்று கூறி வருகின்றனர்.

ponniyin-selvan-updatenews360 3

நாளுக்கு நாள் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மொத்தம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் போட்ட பணத்தை எடுத்து விட்டது.

ponniyin-selvan-updatenews360 3

இந்த படத்தின் முதல் பாகத்தின் போதே 2-ம் பாகமும் படமாக்கப்பட்டுள்ளது. 2 பாகங்களும் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று லைகா நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பட குழு தற்போது அறிவித்துள்ளது.

ps 2 - updatenews360
Views: - 440

1

0