சூர்யா பயங்கரமான ஆளு.. பீல்ட் அவுட் நடிகர்: பிரபல நடிகர் பளீர் பேட்டி..!

Author: Vignesh
2 December 2023, 11:44 am

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ” கங்குவா ” இரு வேறு காலகட்டங்களில், வரலாற்றுப் பின்னணியில் கொண்ட கதையாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. பான் இந்தியா படமாக 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

பெரும் பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் மிரட்டலாக உருவாகி மிகப்பெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்க முடிகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் போது ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் சூர்யாவின் தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு தக்க சிகிச்சை அளித்து மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, சூர்யா ஓய்வெடுப்பதற்காக மும்பைக்கு கிளம்பி இருக்கிறார். அவரை ஜோதிகா பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு ஏர்போர்ட்டிற்கு வரும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ சூர்யா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

babloo-prithiviraj

இந்த நேரத்தில், பாலிவுட் படமான அனிமல் படத்தில் நடித்துள்ள பப்லு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசும்போது, நடிகர் சூர்யா ஒரு பயங்கரமான மனிதர், நடுநிலையான ஆள், ஆனால் இப்போது அவருக்கு சினிமாவில் மார்க்கெட் எல்லாம் ஒன்றும் இல்லை. பீல்ட் அவுட் நடிகர் என்று தான் கூற வேண்டும் என பேட்டி கொடுத்துள்ளார்.

  • Idlikkadai vs Good Bad Ugly box office clash அஜித் படத்திற்கு வழிவிட்ட தனுஷ்…ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு..!