‘கேஸ் டேங்கர்’ மாதிரி இருக்க.. தவறாக பேசிய இயக்குனர்கள் குறித்து ஓப்பனாக பேசிய ராஷி கண்ணா..!

Author: Vignesh
2 March 2024, 2:56 pm
raashi khanna - updatenews360
Quick Share

அறிமுகம் ஆன ஆரம்பத்திலே தெலுங்கில் படங்களில் நடித்து வெகு சீக்கிரத்திலே பிரபலம் ஆனவர் நடிகை ராஷி கண்ணா. கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘மெட்ராஸ் கபே’ என்கிற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து தெலுங்கில் நடிக்க துவங்கினார்.

இவர் நடித்த படங்கள் படங்கள் அனைத்தும் நல்ல வசூல் ஈட்டி வெற்றியடைந்ததால் குறுகிய காலத்திலே அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து ஹிட் நடிகையானார். தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தை மூலம் அறிமுகம் ஆனார். இதனிடையே எக்க சக்க கவர்ச்சியை வாரி இறைத்ததாலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா தற்போது கண்ணை கவரும் சிகப்பு நிற லோ நெக் உடையில் தாறுமாறான கிளாமர் காட்டி தெறிக்கவிட்டுள்ளார். இந்த ரீசன்ட் கிளாமர் கிளிக்ஸ் இணையத்தில் தீயாய் பரவியது.

தற்போது, பிஸியாக நடித்து வரும் ராஷி கண்ணா தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில், வாய்ப்பு தேடி செல்லும் பொழுது தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் குறித்து பேசியுள்ளார். அதில், வாய்ப்பு தேடி செல்லும்போது சில இயக்குனர்கள் தன்னுடைய உடல் எடையை பார்த்து பட வாய்ப்புகள் தரவில்லை என்றும், அதில் சிலர் தன்னை கேஸ் டேங்கர் எனக்கூறி வாய்ப்பு தர மறுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். உடல் எடையால் அவமானப்பட்ட நடிகை ராசி கண்ணா அதன்பின்னர், உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

raashi khanna - updatenews360
Views: - 103

0

0