அரண்மனை போல இருக்கே.. ஹைதராபாத்தில் 3-வது வீடு வாங்கிய நடிகை ராஷி கண்ணா..!

Author: Vignesh
5 April 2024, 5:20 pm
Rashi Khanna -updatenews360
Quick Share

புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா .

Rashi Khanna -updatenews360

ரொம்ப நாள் தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் திருச்சிற்றம்பலம், இப்போது ரிலீஸான அரண்மனை 3, விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Rashi Khanna -updatenews360

மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதுதவிர சைத்தான் கே பச்சா,மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா, அவ்வப்போது, தன்னுடைய Instagram பக்கத்தில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார்.

இதனிடையே, நடிகை ராஷி கண்ணா தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக வேண்டும் என்பதாற்காக கடந்த சில மாதங்களாக கடினமான ஒர்க் அவுட்களை மேற்கொண்டார்.

அதன் பலனாக தற்போது, உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறி உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது, வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Rashi Khanna -updatenews360

மேலும் படிக்க: ரியல் எஸ்டேட்டில் கொட்டும் பணம்.. சினிமாவை போல் பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கும் ராஷ்மிகாவின் Net Worth..!

தற்போது, சுந்தர் சி யின் அரண்மனை 4 படத்தில் ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹைதராபாத்தில் மூன்றாவது வீட்டை வாங்கி உள்ளார். அவர் பலகோடி கொடுத்து வாங்கி இருக்கும் புது வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று நடைபெற்றது. குடும்பத்துடன் அவர் புது வீட்டில் பூஜை செய்யும் புகைப்படங்கள் தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சுமார் 58 கோடி ரூபாய் சொத்து மதிப்பு வைத்திருக்கும் ராசி கண்ணா வாங்கி இருக்கும் மூன்றாம் வீடு அரண்மனையை போல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Rashi Khanna -updatenews360
Rashi Khanna -updatenews360
Rashi Khanna -updatenews360
Views: - 77

0

0