ரஜினி, ஐஸ்வர்யா இடையே கடும் மோதல்?.. மகளின் குளறுபடியால் கோபத்தில் கரராக பேசிய சூப்பர் ஸ்டார்..!

Author: Vignesh
17 May 2023, 3:30 pm

விஜய்யை வைத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பீஸ்ட் படத்தை இயக்கி பெரும் தோல்வியை கொடுத்தார் நெல்சன். அதன் பின்னர் தற்போது ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். முஸ்லீம் நபராக இப்படத்தில் நடித்துள்ள ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

rajini - updatenews360

இதற்காக ரஜினி மும்பைக்கு புறப்பட்டு சென்று அப்படத்தின் ஆரம்ப வேளைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. இதில் கலவரம் வெடிக்க, ரஜினிகாந்த் இஸ்லாமியர் போல தாடி வைத்து, தொப்பி அணிந்து, கண்ணாடி அணிந்து ஸ்டைலாக வர மாதிரி போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

rajini - updatenews360

ஆனால், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி சிலர் போஸ்டர் மோசமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்காக ரஜினி மும்பை சென்று மூன்று நாட்கள் மட்டுமே ஷூட்டிங் சென்றாராம். மற்ற நேரம் சும்மாவே இருந்துள்ளாராம்.

இதற்கு காரணம் ஐஸ்வர்யாவின் நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிடம் கரராக பேசிவிட்டு மும்பையில் இருந்து திரும்பி சென்னை வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Sunny Deol praises South Indian cinema தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!