படம் பயங்கர ரொமான்டிக்காக இருக்கும் போல.. ரன்பீர் கபூருடன் லிப் லாக் காட்சியில் ராஷ்மிகா..!

Author: Vignesh
10 October 2023, 11:45 am
rashmika mandanna -updatenews360
Quick Share

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

rashmika mandanna -updatenews360

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

rashmika mandanna -updatenews360

முன்னதாக ராஷ்மிகா அமிதாப் பச்சனுடன் இணைந்து குட்பாய் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேல் எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோ பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

rashmika mandanna -updatenews360

டீசர் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக இந்த படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். அதற்கான அறிவிப்பு ரன்பீர் கபூர் – ராஷ்மிகா லிப் லாக் ரொமான்டிக் முத்த காட்சி போஸ்டருடன் வெளிவந்துள்ளது. Hua Main என ஹிந்தியில் தலைப்பிட பட்டுள்ள இந்த பாடல் நாளை வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.

Views: - 364

0

1