இது நல்லதுக்கு இல்ல…. பொறுமையை இழந்த வாரிசு பட நடிகை ராஷ்மிகா: கோபத்தில் போட்ட திடீர் பதிவால் ரசிகர்கள் ஷாக்..!

Author: Vignesh
9 November 2022, 5:15 pm

நடிகை ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு ஹீரோயினாக மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். தற்போது தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தியிலும் தற்போது நடித்து வருகிறார்.

அவர் அடுத்து வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருக்கும் நிலையில் அதன் முதல் பாடல் ரஞ்சிதமே சில தினங்கள் முன்பு ரிலீஸ் ஆகி இருந்தது. ரசிகர்கள் அந்த பாடலை கொண்டாடினாலும் ஒரு தரப்பினர் ட்ரோல் செய்து வருகிறர்ர்கள்.

பாடலை காபி என சொல்லி சில ட்ரோல் செய்ய, அதில் ராஷ்மிகா கரகாட்டக்காரன் கோவை சரளா போல இருக்கிறார் என ட்விட்டரில் ட்ரோல் செய்தனர்.

ட்ரோல்களுக்கு பதிலடி

இந்நிலையில் தற்போது ராஷ்மிகா ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து ஒரு நீண்ட போஸ்ட் போட்டிருக்கிறார்.

Rashmika-Mandanna-updatenews360-1-5

அதில் அவர் கூறி இருப்பதாவது..

“கடந்த சில தினங்களாக, மாதங்களாக.. ஏன் வருடங்களாக கூட எனக்கு ஒரு விஷயம் பிரச்சனையாக இருந்து வருகிறது. நான் பல வருடங்களுக்கு முன்பே இதை பற்றி பேசி இருக்க வேண்டும்.

நான் நடிக்க தொடங்கியதில் இருந்தே ட்ரோல்களை சந்தித்து வருகிறேன். என்னை எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என எதிர்பார்க்கவில்லை. அதற்காக பிடிக்கவில்லை நீ கூறி நெகட்டிவிட்டியை உமிழாதீர்கள்.

நான் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று தான் கடினமாக உழைத்து வருகிறேன். உங்கள் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி. நான் சொல்லாத விஷயங்களை கூட வைத்து என்னை ட்ரோல் செய்து அசிங்கப்படுத்துவதை பார்த்து எனக்கு heart breaking ஆக இருக்கிறது.

இதை எல்லாம் ignore செய்ய பலரும் அட்வைஸ் சொல்கிறார்கள், ஆனால் இது எல்லை மீறி போகிறது. ட்ரோல்கள் பற்றி பேசுவதால் நான் யாரையும் ஜெயிக்க விரும்பவில்லை.

“Be kind everyone. We’re all trying to do our best” என ராஷ்மிகா கூறி இருக்கிறார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!