ரோபோ சங்கரை வண்டியில் உட்காரவைத்து தள்ளிச்செல்லும் மனைவி – என்னாச்சு? பதற்றத்தில் ரசிகர்கள்!

Author: Rajesh
31 January 2024, 11:28 am
Quick Share

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

அதையடுத்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி , புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். இவரது மனைவி பிரியங்காவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நேரத்தில் ரோபோ ஷங்கர் கடந்த மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார். அதன் பின்னர் தொடர் சிகிச்சை எடுத்து தற்போது நலமாக இருக்கிறார்.

இந்நிலையில் அவரது மனைவி பிரியங்கா தற்போது சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் லக்கேஜ் வைத்து தள்ளி கொண்டு வரும் வண்டியில் அமர வைத்து தள்ளிவரும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த டப்ஷ்மாஷ் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Views: - 171

0

0