வாயில வாஸ்து சரியில்லை.. தனுஷுன் அந்த பழக்கம் குறித்து பொது இடத்தில் உளறிய ரோபோ ஷங்கர்..!

Author: Vignesh
4 July 2023, 10:30 am
robo shankar-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் , வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

dhanush dp

தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் எந்த இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் தனுஷ் வெளியிட்டிருந்தார். ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததால் தனுஷ் தனது அடுத்த படமான 50 படத்திற்காக தயாராகி வருகிறார்.

இந்நிலையில், தனுஷ் உடன் மாரி படத்தில் இணைந்து நடித்த ரோபோ சங்கர் தனுஷ் குறித்து தற்போது பேசியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ரோபோ சங்கருக்கு மது பழக்கம் இருந்தது அனைவரும் அறிந்த விஷயமே.

robo shankar-updatenews360

அந்த பழக்கத்தில் இருந்ததால் அவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு அதுவும் உயிர் போகும் நிலைக்கு போராடி தற்போது மீண்டு வந்துள்ளார். இதனிடையே, சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனுசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், ஆனால் அவர் சுதாரித்து நிறுத்தி விட்டதாகவும் கூறியுள்ளது எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும், ரோபோ ஷங்கர் தற்போது அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவதால் நெட்டிசன்கள் இவருக்கு வாயில வாஸ்து சரி இல்ல என்று கூறி வருகின்றனர்.

Views: - 436

0

1