பலவிதமான கஷ்டங்கள்..! டிரெய்லர் வெளியீட்டு விழாவில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட நடிகை சமந்தா..!

Author: Vignesh
10 January 2023, 10:07 am

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கில் Ye Maaya Chesave மற்றும் தமிழில் விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. இதற்கு முன்னர், கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் மற்றும் சில முக்கிய விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 2010ம் ஆண்டு, அதர்வா ஜோடியாக பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்த இவர், இதன் பின்னர், நிறைய தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Samantha_Updatenews360

நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழில் நல்ல ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார். இதன் மூலம், அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று, தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார். கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் சமந்தா நடித்த யசோதா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Samantha_Updatenews360

இந்நிலையில், இயக்குனர் குணசேகர் எழுத்து மற்றும் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் உருவாகும் திரைப்படம் “சகுந்தலம்”. பான் இந்திய படமாக உருவாகும் இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. Gunaa DRP – Teamworks சார்பில் நீலிமா குணா, இப்படத்தை தயாரிக்கிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.

இபடத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீன் மகள் அல்லு அர்ஹா இப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Samantha-Updatenews360

இப்போது சமந்தாவே பெரிய அளவில் எதிர்ப்பார்க்கும் சகுந்தலம் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இப்படத்தின் இயக்குனர் குணசேகரன் பேசும்போது, இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என அவர் கூற, உடனே எமோஷனல் ஆன சமந்தா, கண்ணீர் விட்டு அழுதார்.

பின் நடிகை சமந்தா பேசும்போது, இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும்.

samantha - updatenews360

ஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும். அப்படித் தான் சாகுந்தலம் படத்துக்கும் நடந்தது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை என்றிருக்கிறார்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 463

    1

    1