தமிழ் சினிமாவில் வில்லன் , ஹீரோ , குணசித்திர நடிகர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருக்கிறவர் நடிகர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்தியராஜ். இவர் சமூக அக்கறையுள்ளவராக பல்வேறு காரியங்களில் தன்னை ஈடுபட்டு வருகிறார்.
இந்திய ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா அட்சய பாத்திரம் அறக்கட்டளை நல்லெண்ணத் தூதுவராகவும் உள்ளார். இந்நிறுவனம் அரசின் இலவச மதிய உணவுத் திட்டதை தமிழ்நாடு பள்ளிக் குழந்தைகளுக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது. இது ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் வசதி குறைந்த சமூகங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை இலவசமாக வழங்கும் முயற்சியாகும் .
இந்நிலையில் தன் மகள் குறித்து நடிகர் சத்யராஜ் பேட்டி ஒன்றில், ” பசுமைப்பள்ளி, பசுமை சமுதாயம் திட்டத்தில் ஈழத்து செல்வா பேத்தியுடன் என் மகள் இணைந்து செயல்படுவார். மேலும், ஈழத்தமிழர்களின் நலனுக்காக என்றும் உழைப்பார் ” என்று சத்யராஜ் சத்யராஜ் தனது மகள் குறித்து பெருமையாக பேசியிருப்பது கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.