மலையாள நட்சத்திரங்களுக்கு தினந்தோறும் வயிற்றுப்போக்கு வரவைத்த ஷகிலா – ஓஹோன்னு ஓடியது இப்படிதான்!

Author: Shree
17 August 2023, 2:25 pm
shakila
Quick Share

ஆபாச படங்களில் முகம் சுளிக்கும் அளவிற்கு நடித்து பிரபலமானவர் நடிகை ஷகிலா. இவர் மோசமான படுக்கையறை காட்சிகள் கவர்ச்சி நடனம் என தமிழ் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கினார். இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் மலையாளம் , தமிழ் என பல்வேறு அடல்ட் திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அத்துடன் குடும்ப ரசிகைகளின் வெறுப்பையும் சம்பாத்தித்து வைத்தார். இருந்தாலும் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார். மலையாளத்தில் இவரது படங்கள் வெளியானாலே பெரிய நட்சத்திர நடிகர்களின் படத்தை பார்க்க யாருமே வரமாட்டார்கள்.

பலகோடி பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஷகிலாவால் நஷ்டமடைந்து விடுவதாக தயாரிப்பாளர்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். ஷகிலா மலையாள சினிமாவின் சாபக்கேடு என அவரை வெறுத்து ஒதுக்கினார்கள். இந்நிலையில் ஷகிலா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன் , ” மலையாள நட்சத்திரங்களுக்கு தினந்தோறும் வயிற்றுப்போக்கு வரவைத்தவர் நடிகை ஷகிலா” என கூறியுள்ளார்.

இதனால் அவருக்கு நிரந்தர ரெட் கார்டு கொடுத்து அவரது படங்களை எடுக்கவே தடைவிதித்து ஓடவிட்டார்கள். அதன் பின்னர் இவரது அடையாளத்தையே மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்து வருகிறார்.

Views: - 337

0

0