என்ன வாழ்க்கடா இது.. சிம்புவை வச்சு செய்யும் பிக்பாஸ் போட்டியாளர்கள்..!

Author: Rajesh
2 March 2022, 11:18 am
Quick Share

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு வெளியிட்டு அந்த வீட்டை விட்டு கிளம்பி விட்டார். இதனால் அந்த இடத்தை நிரப்புவதற்காக சரியான ஆள் சிம்பு தான் எனக் கூறி கூறி சிம்புவை அங்கே நிறுத்தி வைத்தனர். அவரும் ஸ்டைலாக வந்து தொகுத்து வழங்க ஆரம்பித்து இருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை சந்தித்த சிம்பு, அவர்களோடு கலகலப்பாக உரையாடினார்.

அப்போது, திடீரென சிம்புவிடம் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒரு கேள்வியை முன் வைத்தனர். உங்கள் வாழ்க்கையில் கல்யாணம் என்று ஒன்று இருக்குதா இல்லையா நம்பலாமா நம்பக்கூடாதா நீங்கள் எப்பொழுது கல்யாணம் செய்வீர்கள், பெண் பார்த்தீர்களா எப்படிப்பட்ட பெண் தேடுகிறீர்கள் என்று கேட்டு சிம்புவை ஒரு நிமிடம் தர்மசங்கடத்திற்கு ஆளாக்கி விட்டனர்.

அப்போது, தாமரை தம்பி கல்யாணம் செய்து கொள்ளுங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொன்னவுடன் சிம்புவிற்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் புன்னகையோடு கடந்து விட்டார். பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பின்பு போட்டியாளர்களை சிம்பு வச்சு செய்யப்போகிறார் என்று நினைத்தால் கடைசியில் சிம்புவை தான் போட்டியாளர்கள் நன்றாக வச்சு செஞ்சு கொண்டிருக்கின்றனர்.

Views: - 330

0

0