சிவகார்த்திகேயனை டோட்டலா காலி செய்யப்போகும் பெரிய ஆபத்து – மனுஷன் தப்பிப்பாரா?

Author: Rajesh
8 January 2024, 9:32 am
sivakarthikeyan
Quick Share

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இப்படம் இந்த மாதம் 12ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கான ப்ரோமோஷன்களில் சிவகார்த்திகேயன் படு பிசியாக இருந்து வருகிறார்.

படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இன்னும் படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கவே இல்லையாம். இதனால் வசூலில் மிகப்பெரிய சறுக்கல் ஏற்படும் என விநியோகிஸ்தர்கள் அஞ்சியுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் சொன்ன தேதிக்கு படம் வருமா என்ற அளவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேலை அப்படி படம் வெளியாகவில்லை என்றால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு சிவகார்த்திகேயனின் கெரியரையே காலி செய்துவிடும்.

இதில் இருந்து அவர் மீண்டு வருவது மிகக்கடினம். ஒரு வேலை குறித்த நேரத்தில் படம் வெளியானாலும் தோல்வி தான் சந்திக்கும். ஏன்னென்றால் அதே தினத்தில் தான் ஹாலிவுட் ரேஞ்சுக்கு பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும், அருண் விஜய்யின் மிஷன் சேப்டர் 1 திரைப்படமும் வெளியாகியுள்ளது. எனவே எப்படி பார்த்தாலும் சிவகார்த்திகேயன் பேராபத்தை சந்திக்கபோவது உறுதி என்கிறது திரைவட்டாரம்.

Views: - 181

0

0