7ஜி ரெயின்போ காலனி நினைவுகளில் இருந்து மீள முடியாத சோனியா அகர்வால் – உருக்கமான ட்விட்!

Author: Shree
9 September 2023, 4:57 pm
sonia agrwal
Quick Share

தமிழ் சினிமாவில் 2000ம் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை சோனியா அகர்வால். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர் நடித்தது மொத்தம் தமிழ் திரைப்படத்தில் தான். கோலிவுட் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகன் தான். அந்த படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தால் காதலிக்க துவங்கினர் பின்னர் 2006ம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர்.

பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். மேலும் இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன. சமீபத்தில் பிரபுதேவாவின் பாஹிரா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இவர்களின் விவாகரத்து குறித்து பல வதந்திகள் வெளியாகியது. சோனியா அகர்வாலுக்கு திருமணத்திற்கு முன்பே குடிப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் இருந்துள்ளது என்றும் இது தெரிந்தே செல்வராகவன் திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால், திருமணத்திற்கு பிறகும் சோனியா அகர்வால் இது போன்று நடந்து கொண்டதால் அது தன் குடும்பத்திற்கு செட் ஆகாது என கஸ்தூரிராஜா கண்டித்தார் என்றும் சோனியா அகர்வால் சில ஆண் நண்பர்களுடன் பழக்கம் வைத்திருந்ததாகவும் அதனால் குடும்பமே சேர்ந்து அவரை ஒதுக்கி விவாகரத்து செய்துவிட்டார்கள் என்றும் செய்திககள் வெளியானது.

பின்னர் விவாகரத்து குறித்து பேசிய சோனியா அகர்வால், திருமணத்திற்கு பின்னர் தான் நடிக்கவே கூடாது என செல்வராகவனின் ஒட்டுமொத்த குடும்பமும் எதிர்த்ததாகவும் அதனால் அவர் ஒரு வருடம் நடிப்பிற்கு கேப் விட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் நடிகை குஷ்பு மூலம் சீரியல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அதில் குடும்பத்தினர் எதிர்ப்புகளை மீறி நடித்ததால் தான் அவர்கள் விவாகரத்து செய்ய சொல்லி டார்ச்சர் செய்ததாக கூறி பகீர் கிளப்பினார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சோனியா அகர்வால் செல்வராகவன் ரொம்ப மோசமானவர் அவரின் முகத்தை கூட நான் பார்க்க விரும்பவில்லை என பேசியிருந்தார்.

இந்நிலையில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாவது குறித்து உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் கல்ட் கிளாஸிக் திரைப்படமான 7ஜி பிருந்தாவன் காலனி 19 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திரையரங்குகளில் வெளியாவதில் மகிழ்ச்சி. 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ஒவ்வொரு நினைவுகளும் இப்போதும் பசுமையாக உள்ளன என பதிவிட்டுள்ளார். ஆனால், இதில் அவர் செல்வராகவன் குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

Views: - 264

0

0