விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா – கலங்கவைக்கும் வீடியோ!

Author: Rajesh
5 January 2024, 12:52 pm
vijayakanth surya
Quick Share

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

vijayakanth-updatenews360

இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.

தொடர்ந்து விஜயகாந்த் செய்த பல்வேறு நற்பணிகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள், திரைதுரைசேர்ந்த பலருக்கு வாழ்வளித்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி கலங்கி அழுத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூர்யா, “அண்ணனின் பிரிவு ரொம்ப துயரமானது. ஆரம்ப காலத்துல் நான் 4, 5 படங்களில் நடித்தும் பெயர் கிடைக்கவில்லை. பின்னர் பெரியண்ணா படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன். அதற்காக கடவுளிடம் வேண்டி அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்தேன்.

அந்த சமயத்தில் சமயத்தில் ஷூட்டிங்கில் என்னை பார்த்து கேப்டன் அண்ணன் இந்த வயசுல அசைவம் சாப்பிடலேனா உடம்புல தெம்பு இருக்காது என்று சொல்லி அவர் தட்டில் இருந்து எடுத்து எனக்கு ஊட்டிவிட்டார். அவ்வளவு அன்பான மனிதர். அவரோடு நான் நடித்த 8 நாளுமே அவரை பிரம்மிச்சு தான் பார்த்தேன். அவரின் துணிச்சலை பார்த்து வியந்துள்ளேன்.

அவரைப்போல் இன்னொருவர் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவர் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு மிகப்பெரிய இழப்பு. அண்ணனோட இழப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவருடைய குடும்பத்தாருக்கும், சொந்தங்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போதும் அவருடைய நினைவில் இருப்போம். அதேபோல் நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்தின் பெயர் வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று எல்லாரும் சேர்ந்து அந்த முடிவை எடுத்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றார் சூர்யா.

Views: - 246

0

0