கோடம்பாக்கமே கௌதமி காலடியில்.. ஓஹோ விஷயம் அப்படி போகுதா?!!
Author: Udayachandran RadhaKrishnan14 March 2023, 1:31 pm
90களில் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கௌதமி, ஆரம்பத்தில் தெலுங்கு படத்தில் அறிமுகமானாலும், தமிழில் முதல்முறைய அறிமுகமானது ரஜினியுடன் தான்.
அந்த கவுரமே அவருக்கு தமிழ் சினிமாவின் உச்சத்தை அடைய வைத்தது. முதல் படமே குரு சிஷ்யன் படத்தில் ரஜினிக்கு ஜோடி, தொடர்ந்து தமிழ் தெலுங்கு, கன்னடா என அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார்.
ஒரு வருடத்தில் 12 படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆந்திராவில் பறிந்த இவர், தொழிலதிபர் ஒருவரை 1998ல் திருமணம் செய்தார், இந்த தம்பதிக்கு சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தை 99ல் பிறந்தது.
பின்னர் அதே வருடத்தில் கணவரை விவாகரத்து பெற்ற கௌதமி, தொடர்ந்து சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் 2004ல் நடிகர் கமல்ஹாசனுடன் வாழ தொடங்கினார். 2016ல் கமல் உடனான உறவை முறித்த கவுதமி, மகளின் எதிர்காலத்தை கருதி இந்த முடிவு எடுப்பதாக கூறினார்.
35 வயதில் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்ட கவுதமிக்கு ஆறுதல் தந்து அரவணைத்தது கமல்தான். பின்னர் புற்றுநோயில் இருந்து குணமாகினார்.
தற்போது கோடம்பாக்கமே கவுதமியை சுற்றி சுற்றி வருகிறது. காரணம் அவரது மகள், தற்போது சினிமாவில் நடிக்க வைக்க போட்டா போட்டி நடைபெறுகிறது.
அழகில் கவுதமியை மிஞ்சும் அளவிற்கு, உள்ள அவர் மகளின் போட்டோ தற்போது இணையத்தில் வட்டமடித்து வருகிறது.