‘துணிவு’ படத்தை அரசு நிறுவனத்தில் புரமோட் செய்த உதயநிதி..! எதிர்ப்புகள் வலுத்ததால் TANGEDCO எடுத்த அதிரடி முடிவு..!

Author: Vignesh
26 December 2022, 10:07 am
ajith - updatenews360 2
Quick Share

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் தனது 61வது திரைப்படமான ‘துணிவு’படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பாவனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

Ajith - Updatenews360

இத்திரைப்படம் வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன், துணிவு படம் போட்டி போடுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ajith and vijay - updatenews360

இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO என்கிற அரசு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் துணிவு படத்தின் போஸ்டருடன் கூடிய டுவிட் ஒன்று போடப்பட்டது. அதில், “மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு தடையின்றி சீரான மின்சாரம் வழங்கிட தன் உயிரை பணயம் வைத்து பாடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

thunivu - updatenews360

ஏனெனில் துணிவு படத்தை தற்போது தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதியின் சொந்த நிறுவனம் வெளியிடுவதால், அதனை புரமோட் செய்வதற்காகவே இவ்வாறு டுவிட் போடப்பட்டு உள்ளதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், உதயநிதி படம்னா அரசு நிறுவனத்தில் புரமோட் செய்வீர்களா? என்று நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

ajith-udhayanithi - updatenews360

இதனையடுத்து, எதிர்ப்புகள் வலுத்ததால், தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO-வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த துணிவு படத்தின் டுவிட் நீக்கப்பட்டது. TANGEDCO நிறுவனம் மக்களிடையே மின்சாரத்துறை பற்றிய அறிவிப்புகள் எளிதில் சென்று சேரும் விதமாக பட காட்சிகளை வைத்து மீம்ஸ்களும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 133

1

0