கதையின் போக்கை மாற்றியதே தோல்விக்கு காரணம் : தனுஷ் பட இயக்குனர் கதறல்..!

Author: Rajesh
24 March 2022, 1:11 pm
Quick Share

நடிகர் தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் இவரின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

இதனிடையே சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாறன். இந்தப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருந்தது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

ஆனால் இறுதியில் படத்தினை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தனுஷ் போன்ற பெரிய நடிகரை இந்தப் படத்தில் கார்த்திக் நரேன் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது இருந்தது. இந்த நிலையில் கார்த்திக் நரேன் தன் மீது இருந்த குற்றச்சாட்டிற்கு தற்போது ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

அதாவது இந்தப் படத்தில் தனுஷின் தலையீடு அதிகமாக இருந்ததாம். அதனால் கதையின் போக்கு மாறி மொத்த படமும் தலைகீழாக மாறியதாகவும், இதுவே படத்தின் படுதோல்விக்கு காரணம் என்றும் அவர் தன் சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். ஆனால் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவர் அந்த பதிவை உடனே நீக்கி விட்டார். இருப்பினும் அவர் தனுஷின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வைத்தது தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 414

2

0