லியோ படத்தை பார்த்து உதயநிதி சொன்ன ரிவியூ.. ஃபயர் விட்ட ‘தளபதி’ ரசிகர்கள்..!

Author: Vignesh
18 October 2023, 11:30 am
leo-updatenews360 d
Quick Share

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். நாளை வெளியாகவுள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. பல சர்ச்சைகளை மீறி படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

udhayanidhi stalin - updatenews360

இந்நிலையில், இப்படத்தை நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தரான உதயநிதி ஸ்டாலின் லியோ படம் படுமாஸாக இருப்பதாக டுவிட் செய்துள்ளார். அதில் அவர் lcu குறித்தும் லியோ பட ரசிகர்களுக்கு  க்ளூ கொடுத்துள்ளார். அவரின் விமர்சனத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Views: - 296

0

0