3 நிமிடத்திற்கு 3 கோடி ரேட் பேசிய ஐட்டம் நடிகை…. ஆடிப்போன தயாரிப்பாளாளர்!

Author: Shree
11 July 2023, 9:09 am
urvasi roudilla
Quick Share

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஊர்வசி ரௌடில்லா கவர்ச்சி நடிகையாக திரைப்படங்களில் ஐட்டம் நடனம் ஆடி அனைவரது கவனத்தையும் கவர்ந்திழுத்தார். இவரது கிளாமர் டான்ஸ் பார்க்கவே ரசிகர்கள் படத்திற்கு டிக்கெட் எடுத்து திரையரங்கிற்கு வருவதுண்டு.

நல்ல அழகு, வசீகரமான தோற்றம் என கவர்ச்சி விருந்து கொடுத்து கவர்ந்திழுத்து வருவார். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி அதன் பின்னர் ஐட்டம் டான்ஸ் ஆடி சினிமாவில் பிரபலமான இவர் 2015ம் ஆண்டு மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார்.

அதன் பிறகு தான் திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க துவங்கியது. 2013 ஆம் ஆண்டு சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4, பகல்பந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் தி லெஜெண்ட் படத்தில் சரவணன் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து கவர்ச்சியான ரோல்களில் நடித்து வரும் ஊர்வசி தற்போது போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் ஒரு படத்தின் பாடலுக்கு குத்தாட்டம் போட ஒரு நிமிடத்திற்கு 1 கோடி என்று 3 நிமிடத்திற்கு மூன்று கோடி சம்பளமாக கேட்டிருக்கிறாராம்.

நிமிடத்திற்கு கோடிகள் கேட்கும் இந்தியாவின் ஒரே நடிகை ஊர்வசி தான் என பேசப்படுகிறார். இதற்கு முன்னர் அவர் நடித்த வால்டர் வீரய்யா படத்திற்காக ரூ.2கோடி வாங்கியிருந்தார். இந்த படத்திற்கி ரூ.1 கோடி சம்பளம் ஏற்றி கேட்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 225

0

0