மீண்டும் காதல் திருமணம் செய்துக்கொண்ட வனிதா… யாருன்னு பாருங்க – இனி விவாகரத்துக்கு வாய்ப்பே இல்லையாம்!

Author: Shree
18 July 2023, 9:44 am
vanitha
Quick Share

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி , தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.

அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் தான் மரணமடைந்தார். வனிதா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கூடவே தனது பிஸினஸையும் கவனித்து வருகிறார். தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள அநீதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் எல்லோரும் அதிர்ச்சியாகும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது. மீண்டும் ஒருவரை காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இந்த முறை விவாகரத்திற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருக்கிறார். சரி அந்த நபர் யாரென்று கேட்டால் “சினிமா” தான் என்கிறார். ஆம், அவர் சினிமாவை காதலித்து வருகிறாராம். இனிமேல் முழு கவனமும் நடிப்பில் மட்டுமே இருக்கும் என அவர் உறுதியாக கூறியுள்ளார்.

Views: - 310

0

0