சொத்துக்கு ஆசைப்பட்டு… இப்படி ஒரு அழகான குடும்பத்தை மிஸ் பண்ணிட்டியே வனிதா – உச் கொட்டும் நெட்டிசன்ஸ்!

Author: Rajesh
19 February 2024, 2:54 pm
vanitha vijayakumar
Quick Share

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார்.

vanitha_updatenews360

பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன் தான் மரணமடைந்தார். இதனிடையே வனிதா அப்பா விஜயகுமாருடன் சொத்து தகராறு செய்து அவரை நடுரோட்டில் இழுத்து அடித்து குடும்ப மானத்தையே வாங்கிவிட்டார். அன்றிலிருந்து அந்த குடும்பத்தில் இருந்தே வனிதாவை பிரித்துவிட்டார்கள். இதனால் பல வருடங்களாக தனது மகள்களுடன் தனித்து வாழ்ந்து வருகிறார் வனிதா.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அருண் விஜய் வீட்டு திருமண வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆம் அருண் விஜய்யின் அக்கா அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் திருமண கொண்டாட்ட வீடியோக்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று மெஹந்தி விழா நடைபெற்ற நிலையில் அதில் ஸ்ரீதேவி, விஜயகுமார், அனிதா விஜயகுமார் , அருண் விஜய் உள்ளிட்டோர் நடனமாடிய வீடியோக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து நெட்டிசன்ஸ் பலர் விஜயகுமாரின் அழகான குடும்பத்தை பார்த்து கமெண்ட்ஸ் செய்து தங்களது கருத்துக்களை கூறி வந்தார்கள். அப்படி சிலர் வனிதாவை பார்த்து, ” சொத்துக்காக ஆசைப்பட்டு, அவசரப்பட்டு இப்படி ஒரு அழகான குடும்பத்தை மிஸ் பண்ணிடீங்களே வனிதா…? எத்தனை கோடி சொத்து கொடுத்தாலும் இப்படி ஒரு அழகான குடும்பத்திற்கு ஈடாகாது. என கூறி கமெண்ட்ஸ் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக வெளியாகி வைரலாகி வரும் திருமண வீடியோ, புகைப்படங்களை பார்த்து வனிதா நிச்சயம் வருந்தியிருப்பார் என சிலர் கூறி வருகின்றனர்.

Views: - 211

0

0