என்னமா இது இப்படி ஊதி தள்ளுற….? சிக்ரெட் புகைத்து சர்ச்சையில் சிக்கிய வனிதா – வைரல் போட்டோ!

Author: Shree
11 July 2023, 5:41 pm
Quick Share

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி , தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.

அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் தான் மரணமடைந்தார். வனிதா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கூடவே தனது பிஸினஸையும் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள அநீதி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது . இந்த படத்தில் வனிதா விஜயகுமார் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இந்நிலையில் வனிதா சிக்ரெட் புகைபிடிப்பது போன்ற போட்டோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் கடைசி தோட்டா படத்தில் வனிதா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இது அப்படத்தில் இடம்பெற்ற புகைப்படம் தானாம் இது. இருந்தாலும் இந்த போட்டோவுக்கு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

Views: - 192

1

0