இனி நான் நடிக்க போவதில்லை.. End Card போட்ட விஜய்.. இவரின் கடைசி படம் யாருடன் தெரியுமா?

Author: Vignesh
30 May 2023, 2:00 pm
Vijay - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தந்தையின் உதவியுடன் சினிமாவில் அறிமுகமாகி இன்று “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார்.

விஜய் தனது 10 வயதில் வெற்றி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் 1992ல் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்து ஹீரோவானார். முதல் படத்தில் நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இவர் தந்தை இயக்கத்தில் நடித்து, அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து விஜய் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார். சமீபகாலமாக விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று தகவல் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இதனிடையே, விஜய் தனது 70 வது படத்தை வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னர் விஜய் முழு நேரம் அரசியலில் ஈடுபடவுள்ளதாக முணுமுணுக்கப்படுகிறது.

Views: - 181

2

2