ஹீரோவாக களமிறங்கும் விஜய்யின் மகன்.. ஹீரோயின் இவங்களா..? படம் வேற லெவல்ல இருக்க போகுது..!
Author: Vignesh3 April 2023, 1:45 pm
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன், வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து தற்போது விஜய் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே, நடிகர் விஜய்யின் மகன் தற்போது குறும் படத்தை இயக்கி வரும் நிலையில், விரைவில் வெள்ளித்திரையில் ஒரு இயக்குனராக அவர் வலம் வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும், தெலுங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் உப்பெண்ணா.
இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைக்க போவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த உப்பெண்ணா படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கீர்த்தி ஷெட்டியே தான் மீண்டும் தமிழ் ரீமேக்கிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் தற்போது வெளியாகவில்லை. முன்னதாக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய படத்தில் விஜய் மகனை நடிக்க வைக்க வேண்டும் என விருப்பப்பட்டதற்கு, சஞ்சய் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என விஜய் தெரிவித்திருந்தார்.
அதே போல் புதிதாக வந்துள்ள இப்படத்தின் வாய்ப்பையும் சஞ்சய் மறுப்பாரா அல்லது, ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.