ஓபிஎஸ் படத்தை வீதியில் வீசி உடைத்தெறிந்த அதிமுக தொண்டர்கள்… காலணியால் தாக்கி ஆவேசம்…!!

Author: Babu Lakshmanan
11 July 2022, 4:34 pm
Quick Share

கோவை : கோவையில் அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை அகற்றி உடைத்து வீதியில் வீசப்பட்டது… அதிமுக தொண்டர்கள் ஆவேசம்….

அதிமுக இரட்டை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினரும், மற்றொரு பக்கம் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அணியினரும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. அதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக ஒரு மனதாக அறிவிக்கப்பட்டார். இதனிடையே, ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்று விட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அலுவலகமும் சூறையாடப்பட்டது.

இதையடுத்து, ஓ. பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால், எடப்படியார் தலைமை அணியினர் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படத்தை நீக்கி உடைத்து கோஷமிட்டு வீதியில் வீசி எறிந்தனர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்களை திருடுவியா..? என்று கூறி, அவரது புகைப்படத்தை காலணி கொண்டு தாக்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அதேவேளையில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

Views: - 446

0

0