திருட்டுக்கு மூளையாக செயல்பட்ட மனைவி… ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவம் ; போலீசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!!

Author: Babu Lakshmanan
30 November 2023, 7:45 pm
Quick Share

கோவை ; ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையனின் மனைவி மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து, சொத்துகள் மீட்கப்பட்டது. அறிவியல் ரீதியான தடவியல் நிபுணர்கள் உதவியுடன் திருட்டில் ஈடுபட்டவர் தருமபுரியை சேர்ந்த விஜய்.

விஜய் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த திருட்டில் விஜயின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். 3 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கைது செய்யப்படுவார். தொடர்ந்து புலன் விசாரணை நடைபெறும். 5 தனிப்படை தொடந்து செயல்படும். விஜய் கைது செய்யும் வரை பணி தொடரும்.

இந்த வழக்கில் மேலும் வேறு யாரும் உடன்பட்டுள்ளனரா?? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தருமபுரி மற்றும் கோவைகளில் திருட்டு வழக்கு விஜயின் மீது உள்ளது. கடையினுள் உள்ள இருப்பவரிடம் தகவல் எப்படி தெரிந்தது?? யாரவது உதவி செய்துள்ளனரா?? என்பது விஜயின் கைது பின்பே தெரியவரும்.

மனைவி நர்மதா திருட்டு சம்பவத்திற்கு உதவியாக இருந்துள்ளார். நகை திருட திட்டமிட்டதில் இருந்து நகை பதுக்கல் மற்றும் விஜய் தப்பிக்க வைப்பதில் இருந்து மனைவிக்கு பங்கு உள்ளது. கூரை பிரித்து தப்பித்து ஒடியுள்ளார்.

அனைத்து நகைகடை மற்றும் விலையுர்ந்த பொருட்கள் வைத்து உள்ள கடைகளில் அலாரம் உள்ள மாதிரியான சிசிடிவி கேமரா பொருத்த அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இரவு ரோந்து பணி அதிகரித்து உள்ளோம். சிசிடிவி செயலி வாயிலாக கண்காணித்து வருகிறோம்.

விஜய் சம்பந்தப்பட்ட முந்தைய வழக்குகளில் பணத்தை குறிவைத்து திருடியுள்ளார். ஆனால் இந்த க்ரைம் வித்தியாசமானது. கடையினுள் புகுந்த கொள்ளையர் முதலில் பணம் உள்ளதா?? என்று பார்த்துள்ளார், என தெரிவித்தார்.

Views: - 254

0

0