‘தொடர் பாலியல் தொல்லை’…சூப்பர்வைசர் மீது பெண் துப்புரவு தொழிலாளி புகார்: பழனி நகராட்சியில் ‘ஷாக்’!!

Author: Rajesh
20 April 2022, 3:08 pm
Quick Share

பழனி நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றும் மாரிமுத்து என்பவர் பாலியல் ரீதியான தொல்லை தருவதாக பெண் ஊழியர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் துப்புரவு பிரிவில் டெங்கு ஒழிப்பு பணியாளராக பணியாற்றி வருபவர் யசோதா. இவர் பழனி நகராட்சியில் துப்புரவுத் மேற்பார்வையாளராக பணி புரியும் மாரிமுத்து என்பவர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, பழனி நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளராக பணி புரியும் மாரிமுத்து என்பவர் துப்புரவு பிரிவில் பணியாற்றும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்.

துப்புரவு பணியாற்றும் பெண்களை தனியார் விடுதிக்கு அழைப்பதாகவும், அங்குவைத்து கை,கால்கள் அமுக்கி விடச்சொல்வதாகவும், மேலும் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

தன்னையும் இதுபோன்று மாரிமுத்து அழைத்தாகும், இதற்கு மறுப்பு தெரிவித்ததால் சாதியை சொல்லியும், தகாத வார்த்தைகளாலும் திட்டுவதாகவும், தொடர்ந்து பணி செய்வதில் இடையுறு செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து பழனி நகராட்சி ஆணையருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து துப்புரவு மேற்பார்வையாளர் மாரிமுத்து தெரிவித்ததாவது, அந்த பெண் சரியாக பணி புரியாததால் பணி நீக்கம் செய்தோம். அதனால் கோபமடைந்த அப்பெண் தன் மீது அபாண்டமாக பலி சொல்வதாகவும், தன்னை பற்றி துப்புரவு பணியாளர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்.

Views: - 711

0

0