சர்க்கரை வள்ளிக்கிழங்கு வடை: ஒரு முறை செய்தால் போதும்… இதற்கு அடிமையாகி விடுவீர்கள்!!!

Author: Hemalatha Ramkumar
13 June 2022, 5:38 pm
Quick Share

இதுவரை பருப்பு வடை, உளுந்து வடை என்று செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இன்று புதுவிதமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு வடை ஒன்று செய்து பார்க்கலாம். இதனை ஒரு முறை செய்தால் போதும், அதன் சுவைக்கு அடிமையாகி விடுவீர்கள். இப்போது இதன் ரெசிபியைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
சக்கரைவள்ளி கிழங்கு – 2 வேர்க்கடலை – ஒரு கப் அரிசி மாவு – 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 3/4 தேக்கரண்டி எண்ணெய் – 1/4 லிட்டர்

செய்முறை:
*வடை செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும், வேர்க்கடலையை அதில் சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.

*வறுத்த கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு மாவாக அரைத்து எடுங்கள்.

*இப்போது சர்க்கரை வள்ளிக்கிழங்கினை நன்கு சுத்தம் செய்து, அதனை துருவி எடுத்து கொள்ளவும்.

*துருவிய சர்க்கரை வள்ளிக்கிழங்கோடு அரைத்த வேர்க்கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

*வடை மாவு பதத்திற்கு வர தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி பிசையவும்.

*அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை சூடாக்கவும்.

*மாவில் இருந்து சிறு சிறு அளவுகளை எடுத்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

*இப்போது சுவையான மொறு மொறு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வடை தயார்.

Views: - 641

0

0