கோயிலில் தரக்கூடிய ருசியான தயிர் சாதம் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
10 June 2022, 7:29 pm

கோவிலில் கொடுக்கக்கூடிய உணவுகளுக்கு எப்போதும் தனி ருசி உண்டு. பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், வடை என்று அசத்தலாக இருக்கும். அந்த வகையில் கோவிலில் பிரசாதமாக தரப்படும் தயிர் சாதம் எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
அரிசி- ஒரு கப்
பால் -ஒரு கப்
வெண்ணெய்- 15 கிராம் தயிர் – ஒரு கப்
ஃபிரஷான பாலாடைக்கட்டி – 2 தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி மாதுளை பழம் – ஒரு கப் பெருங்காயத் தூள் – அரை தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கேரட் – 1
பச்சை மிளகாய் – ஒன்று இஞ்சி சிறிய துண்டு – ஒன்று
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
வர மிளகாய் – 4 உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி கருவேப்பிலை – ஒரு கொத்து கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை:
*தயிர் சாதம் செய்வதற்கு முதலில் ஒரு குக்கரில் சுத்தம் செய்து கழுவி எடுத்த ஒரு கப் அரிசி, ஒரு கப் பால், உப்பு, வெண்ணெய், பாலாடைக்கட்டி மற்றும் மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிவிட்டு 6 விசில் வரும் வரை காத்திருக்கவும்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

*எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

*கடுகு பொரிந்தவுடன் அதில் பெருங்காயத் தூள் மற்றும் ஒரு கப் தயிர் சேர்த்து கிளறி விட்டு இவற்றை குக்கரில் உள்ள சாதத்தில் சேர்க்கவும்.

*கடைசியில் கொத்தமல்லி தழை, துருவிய கேரட், மாதுளம் முத்துக்கள் ஆகியவற்றை சேர்த்து கிளறினால் அருமையான தயிர் சாதம் தயார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?