மைதா பிஸ்கட்: ஒரே ஒரு கப் மைதா மாவு இருந்தா போதும்… அசத்தலான ஸ்வீட் தயார்!!!

Author: Hemalatha Ramkumar
2 February 2023, 7:19 pm

இனி ஸ்வீட் சாப்பிட வேண்டும் போல இருந்தால் கடைக்கு சென்று வாங்க வேண்டாம். பத்தே நிமிடத்தில் ஒரு கப் மைதா மாவு மட்டும் வைத்து செம டேஸ்டான கஜடா எப்படி செய்வது என பார்க்கலாம். இதனை மைதா பிஸ்கட் அல்லது கலகலா என்றும் அழைப்பர். பலருக்கு ஃபேவரெட்டான இந்த மைதா பிஸ்கட்டை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 400 கிராம் சர்க்கரை – 100 கிராம் ஏலக்காய் – 4
நெய் – இரண்டு தேக்கரண்டி
காய்த்து ஆற வைத்த பால் – தேவையான அளவு சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:
* மைதா பிஸ்கட் செய்ய முதலில் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் ஏலக்காயையும் போட்டு அரைத்து கொள்ளவும்.

*அரைத்த சர்க்கரையை மைதா மாவுடன் கலக்கவும்.

*பின்னர் நெய் அல்லது டால்டா சேர்த்து கலந்து கொள்ளவும்.

*இதனோடு காய்த்து ஆற வைத்த பால் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

*மாவை பிசைந்த பின் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

*இப்போது மாவை பெரிய உருண்டையாக உருட்டி சப்பாத்தி தேய்க்கும் கட்டையால் விரித்து கொள்ளவும்.

*மிதமான அளவில் விரித்து அதனை உங்களுக்கு பிடித்தமான அளவில் வெட்டவும்.

*இப்போது கடாயில் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் நாம் வெட்டி வைத்த துண்டுகளை போட்டு சிவந்து வரவிட்டு பொரித்து எடுக்கவும்.

*அவ்வளவு தான்… சுவையான மைதா பிஸ்கட் தயார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!