பதினைந்தே நிமிடத்தில் கம கமன்னு தயாராகும் தேங்காய் பால் புலாவ்!!!

Author: Hemalatha Ramkumar
22 February 2023, 10:44 am
Quick Share

அன்றாடம் என்ன சமையல் செய்ய வேண்டும் என்பதை யோசிப்பதே தாய்மார்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கும். அனைவருக்கும் பிடித்த மாதிரியும் இருக்க வேண்டும், அதே சமயம் எளிமையான சமையலாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தேங்காய் பால் ந
புலாவ். இதனை வெறும் 15 நிமிடங்களில் செய்து விடலாம். இப்போது இதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி- 1கப்
தேங்காய் பால்- 1 1/2 கப்
பச்சை பட்டாணி- 1/4 கப்
நெய்- 3 தேக்கரண்டி
பட்டை- 1
ஏலக்காய்- 3
பிரியாணி இலை- 1
கிராம்பு- 3
கசகசா- சிறிதளவு
எண்ணெய்- 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்- 2
பச்சை மிளகாய்- 4

செய்முறை:
*முதலில் அடுப்பில் குக்கரை வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றவும்.

*இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கசகசா ஆகியவற்றை சேர்க்கவும்.

*இவை பொரிந்தவுடன் நீட்டு வாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை பட்டாணி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிவந்து வரும் வரை நன்கு வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் பத்து நிமிடங்கள் ஊற வைத்து சுத்தம் செய்த பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்.

*ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தேங்காய் பால் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.

*தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி ஒரு விசில் விட்டு எடுத்தால் சுவையான தேங்காய் பால் புலாவ் தயார்.

Views: - 349

0

0