பாசிப்பருப்பு வைத்து இப்படி ஒரு அசத்தலான ரெசிபியா…???

Author: Hemalatha Ramkumar
1 March 2022, 7:09 pm
Quick Share

பாசிப்பருப்பு வைத்து பல விதமான உணவு வகைகளை செய்யலாம். அதில் பாயாசம், பொங்கல் ஆகியவை பாசிப்பருப்பு வைத்து செய்யப்படும் ஸ்பெஷல் ரெசிபிகள். உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் உண்டு. அதாவது நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான அசோகா அல்வாவை பாசிப்பருப்பு கொண்டு தான் செய்ய வேண்டும். இதனை பத்தே நிமிடத்தில் செய்து விடலாம். இப்போது இதனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு
நெய்
கோதுமை மாவு
சர்க்கரை
முந்திரி பருப்பு
பாதாம் பருப்பு

செய்முறை:
*அசோகா அல்வா செய்வதற்கு முதலில் ஒரு கப் பாசிப்பருப்பை குக்கரில் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும்.

*இதற்கு இடையில் கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும்.

*நெய் உருகியதும் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

*இதே நெய்யில் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து வறுத்து கொள்ளவும்.

*பின்னர் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

*இப்போது அரைத்த கலவையை கடாயில் சேர்த்து கிளறவும்.

*தேவையான அளவு நெய் ஊற்றி கை விடாமல் அல்வா பதம் கிடைக்கும் வரை கிளற வேண்டும்.

*கடைசியில் வறுத்த முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கினால் ருசியான அசோகா அல்வா தயார்.

Views: - 872

0

0