ஆரோக்கியமான உடல் எடையை அதிகரிக்க உதவும் ருசியான சிவப்பு அவல் பொங்கல்!!!

Author: Hemalatha Ramkumar
19 மே 2022, 4:05 மணி
Quick Share

சிவப்பு அவல் பிசினி போன்ற சிவப்பு அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. வெள்ளை அவலை விட சிவப்பு அவல் நல்லது. இதற்குக் காரணம், பட்டை தீட்டப்படாத சிவப்பரிசியில் இருந்து தயாரிக்கப்படுவது தான். சிவப்பு அவல் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவும். ஆரோக்கியமும், சத்துக்களும் நிறைந்த சிவப்பு அவுலை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு அவல் வைத்து சிவப்பு அவல் பொங்கல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சிவப்பு அவல் – 1 1/2கப்

பனங்கற்கண்டு – தேவையான அளவு

பாசிப்பருப்பு – 1/2 கப்

நெய் – 100( கிராம்)

பால் – 1 1/2 கப்

முந்திரி, திராட்சை – 20( கிராம்)

ஏலக்காய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

* முதலில் வெறும் வாணலியில் பாசிப்பருப்பு , சிவப்பு அவல் இரண்டையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

*பிறகு குக்கரில் பாலோடு 3 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். சிவக்க வறுத்த அவல், பாசிப்பருப்பு மற்றும் நாலு கல் உப்பு போட்டு கிளறி மூடி வெயிட் போட்டு, நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.

* பிரஷ்ர் தணிந்த பிறகு, குக்கரைத் திறந்து கலவையை லேசாக மசித்து விட்டு, பனங்கற்கண்டு சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.

*பிறகு நெய், ஏலக்காய்த்தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

*பின்பு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு இருக்கும் நிலையில் இறக்கி விடவும்.

* இப்போது சுவையான, ஆரோக்கியமான, கமகமக்கும் சிவப்பு அவல் பொங்கல் தயார்.

  • TVK Vijay விஜய் கட்சியில் இணையும் முன்னாள் ஐஏஎஸ்? புதிய சர்கார் அமைக்குமா தமிழக வெற்றிக் கழகம்?!
  • Views: - 1274

    0

    0