முழு அதிகாரம் இருக்கு.. யார் சொன்னாலும் நாங்க விவாதிப்போம் : காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் அறிவிப்பால் திமுகவுக்கு நெருக்கடி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2022, 6:53 pm
Cauvery Meghadad - Updatenews360
Quick Share

மேகதாது குறித்து ஜூன் 23ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிப்போம் என அதன் தலைவர் ஹல்தர் அறிவித்துள்ளார்.

தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர், மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது. வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆணையத்தின் கூட்டத்தில், அனைத்து விவகாரங்களுக்கு விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு. நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை, யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் பேட்டியளித்துள்ளார்.

காவரி மேலாண்மை கூட்டத்தின் போது மேகதாது குறித்து விவாதிக்க கூடாது என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் காவிரி நதிநீர் மேலாண்மை கூட்டத்தின் தலைவர் அறிவிப்பு திமுகவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 488

0

0