டிமான்டி காலனி இரண்டாம் பாகம் – உறுதி செய்த படக்குழு.. படப்பிடிப்பு எப்போது.?

Author: Rajesh
22 May 2022, 7:39 pm
Quick Share

2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதன்பிறகு அஜய் ஞானமுத்துவிற்கு நயன்தாராவை வைத்து ’இமைக்கா நொடிகள்’ என்ற படத்தை இயக்க வாய்ப்பு வந்தது. பிறகு விக்ரமின் கோப்ரா என பல படங்கள் கிடைத்தது. அந்த அளவிற்கு இப்படம் அனைவரையும் கவர்ந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிட்டததட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதன் அறிவிப்பை “டிமான்டி காலனி” திரைப்படம் வெளியான (மே 22, 2015) 7 ஆண்டுகள் கழித்து அதே நாளில் இன்று இதன் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2″ படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Views: - 874

0

0