மழை வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் திமுக அரசு : செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2023, 7:35 pm
Sellur Raju - Updatenews360
Quick Share

மழை வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் திமுக அரசு : செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு!!

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 லாரிகள் மூலம் அரிசி பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

நிவாரண பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை வழியனுப்பி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில் சென்னையில் 2015 ஆம் ஆண்டு 130 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத மழை பெய்தது, 2015 ல் ராணுவ தளபதி போல ஜெயலலிதா மீட்புப் பணிகளை செய்தார் என அனைவரும் பாராட்டினார்கள்.

சென்னை மழை வெள்ளத்தால் பல இடங்கள் தீவை போல காட்சி அளிக்கிறது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசின் மீது கோபத்தில் உள்ளனர், தமிழகத்திலிருந்து சென்னைக்கு நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் விலக்கு அளிக்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், 4000 கோடி செலவழித்ததற்கான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் விபரங்களை தமிழக அரசு மறைத்து வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்

Views: - 136

0

0