முதல் முறையாக அஜித் படத்தில் இணைந்த பிரபல நடிகர்..? வெளியான தகவல்..!

Author: Rajesh
13 May 2022, 12:53 pm
Quick Share

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் AK61. இப்படம் குறித்து பல விதமான தகவல் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் முதற்கட்ட வேலை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது.

இப்படத்தில் சண்டைக்காட்சிகள் என தனியே ஏதும் இல்லது ஹீரோக்கும், வில்லனுக்குமான டெக்னிக்கல் சண்டையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே, பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே நிறைய திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும், முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 673

3

0