வழக்கமா சாப்பிடுற சாப்பாட்டுல இத ஒரு சிட்டிகை சேர்த்தா போதும்… நீங்க நினைச்ச மாதிரியே ஸ்லிம்மாகிடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
13 December 2022, 5:17 pm

இந்திய உணவானது நமது சுவை மொட்டுகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்திற்கும் சமமான நன்மைகள் வழங்குகிறது. அந்த வகையில் உணவில் சேர்க்கப்படும் பல்வேறு மசாலாப் பொருட்களை பெரும் பங்கு வகிக்கிறது. அவற்றில் கருப்பு மிளகு சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் என்பதை நாம் அறிவோம். இருப்பினும் மிளகு உடல் எடையைக் குறைக்க உதவும் என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படலாம்.

கருப்பு மிளகு வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் இயற்கையான வளர்சிதை மாற்ற ஊக்கியாக செயல்படுகிறது. இது எடை இழப்பு உட்பட எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியமாக உள்ளது.

உங்கள் உணவில் சிறிதளவு கருப்பு மிளகு சேர்ப்பதால், கலோரிகள் எளிதாக எரிக்கப்படுகின்றன. இது புதிய கொழுப்பு செல்கள் உருவாகுவதைத் தடுக்கிறது மற்றும் கொழுப்பு திரட்சியை அடக்குகிறது.

மிளகு பயன்படுத்த சில வழிகள்:

* கருப்பு மிளகு எரியும் சூடான சுவையை பொறுத்துக்கொள்ளக்கூடியவர்கள் தினமும் காலையில் 1-2 மிளகு சாப்பிடலாம். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

* நீங்கள் வழக்கமாக அருந்தும் தேநீரில் புதிதாக அரைக்கப்பட்ட கருப்பு மிளகு ஒரு சிட்டிகை சேர்க்கவும்.

* கருப்பு மிளகை உங்களுக்கு பிடித்த சாலட் மீது தூவி சாப்பிடலாம். இது உங்கள் உணவுக்கு கூடுதல் சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல் எடை இழப்புக்கும் உதவுகிறது.

* மோர் அல்லது புதினா-எலுமிச்சைப் பழம் பானத்தில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்க்கலாம். இது உடல் எடையை குறைப்பது மட்டும் அல்லாமல் ஆரோக்கியமான குடல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…