நிறைய தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமா…???

Author: Hemalatha Ramkumar
20 March 2023, 4:16 pm

தண்ணீர் நம் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதைத் தவிர நீரானது இன்னும் ஏராளமான நன்மைகளை நமக்கு வழங்குகிறது. அந்த வகையில், உடல் எடையை குறைக்கவும் தண்ணீர் உதவும். உண்மையில், எடை இழப்பில் தண்ணீருக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது.

நமது உடலில் 60 சதவிகிதம் நீரால் ஆனது. இது வளர்சிதை மாற்றம், உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நீரேற்றம் தவிர ஊட்டச்சத்துக்களின் போக்குவரத்து போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்குத் தேவைப்படுகிறது.

நீர் உட்கொள்ளலை அதிகரிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் எடை குறைக்க உதவுகிறது. இது குறைந்த கலோரி உட்கொள்ளலை ஏற்படுத்துகிறது, இதனால் உங்கள் உடல் எடை குறையும். ஆனால் உடற்பயிற்சிகள் போன்ற மற்ற விஷயங்களுடன் இணைந்தால் மட்டுமே எடை இழப்புக்கு தண்ணீர் உதவும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நபர் தினமும் குறைந்தபட்சம் 1.5 முதல் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது முக்கியம். இது நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ஆனால் நீங்கள் எப்போது பசியுடன் இருக்கிறீர்கள் மற்றும் உங்கள் உடல் நீரிழப்பு மற்றும் தண்ணீர் தேவைப்படும் போது புரிந்துகொள்வது அவசியம். எடை இழப்புக்கு தண்ணீர் குடிப்பது நல்லது என்றாலும், அதை எப்போது குடிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் உணவை உண்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உணவை குறைவாக சாப்பிட வைக்கும். ஆகையால் உங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்படுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?