நாக்கு வெள்ளையா இருக்க இப்படி கூட ஒரு அர்த்தம் இருக்கா…???

Author: Hemalatha Ramkumar
20 February 2023, 7:30 pm

நம் நாக்கு என்ன நிறத்தில் உள்ளது என்பதை வைத்தே நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பதை சொல்லி விடலாம். நாக்கானது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் அது வழக்கமானது தான். வெளிர் நிறம், நீல நிறம், மஞ்சள் நிறம், கருப்பு நிறம், சிவப்பு நிறம், பிரவுன் நிறம் போன்றவற்றில் நாக்கு இருந்தால் அது உடலில் ஏதோவொரு கோளாறு இருப்பதை குறிக்கிறது.

ஒரு சிலருக்கு நாக்கு முழுவதும் வெள்ளை வெள்ளையாக இருக்கும். இந்த வெள்ளை திட்டுகள் ஒரு சில நேரங்களில் தொற்று நோயை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் நாக்கு எப்போதும் வெள்ளை நிறத்தில் இருந்தால் நீங்கள் ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும். நுண்ணுயிரிகள், உணவு, அழுக்கு மற்றும் இறந்த செல்கள் போன்றவற்றால் இந்த வெள்ளை திட்டுகள் ஏற்படலாம்.

ஒரு சில நேரங்களில் இந்த வெள்ளை திட்டுகள் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே இதனை லேசாக விட வேண்டாம். இதனை ஒரு சில வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதில் போக்கி விடலாம். அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பேக்கிங் சோடா:
ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு பேஸ்ட் போல குழைத்து கொள்ளவும். இப்போது ஒரு சாஃப்ட் பிரஷ் எடுத்து அதில் இந்த பேஸ்டை வைத்து நாக்கு மீது பொறுமையாக தேய்க்கவும். இவ்வாறு தினமும் செய்யுங்கள்.

தயிர்:
ஒரு கிண்ணத்தில் தயிர் எடுத்து அதனை நாக்கில் படுமாறு வாயில் ஊற்றி உமிழ்நீரோடு சேர்த்து விழுங்குங்கள். இதனை தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.

மஞ்சள் தூள்:
ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் எடுத்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் விரலில் தொட்டு நாக்கில் தேயுங்கள். பிறகு சாதாரண நீரில் வாய் கொப்பளித்து விடலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?