தாறுமாறா தலைமுடி கொட்டினா அதுக்கு காரணம் இதுவா தான் இருக்கணும்!!!

Author: Hemalatha Ramkumar
27 November 2024, 10:42 am

ஒரு சரிவிகித உணவு என்பது நம்முடைய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்களை கொண்டிருக்க வேண்டும். இந்த நுண்ணூட்டச்சத்துக்கள் ஆற்றல் உற்பத்தி, நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடு மற்றும் செல் வளர்ச்சி போன்ற உடலின் பல்வேறு செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நமது உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கி, எலும்பு ஆரோக்கியத்திற்கு ஆதரவு தந்து, ஆற்றும் செயல்முறையை மேம்படுத்துகிறது. மேலும் அவை ஆன்டி-ஆக்சிடன்ட்களாக செயல்பட்டு ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்கிறது. எனினும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் குறைபாடு இருந்தால் அதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த பிரச்சனைகள் ஏற்படும் பொழுது நமக்கு சோர்வு மற்றும் வலுவிழந்து காணப்படுதல் போன்ற பல அறிகுறிகள் உண்டாகும். எனவே ஒருபோதும் நீங்கள் அலட்சியப்படுத்தக் கூடாத வைட்டமின் குறைபாடுகளுக்கான அறிகுறிகள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

தலைமுடி மற்றும் நகங்கள் அடிக்கடி உடைந்து போவது

வைட்டமின்கள் குறைபாடு இருந்தால் தலைமுடி மற்றும் நகங்கள் அடிக்கடி உடைந்து போகலாம். பயோட்டின், வைட்டமின் E மற்றும் கெரட்டின் போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடு தலைமுடியை எளிதில் உடைய கூடியதாகவும் மாற்றும். அதே நேரத்தில் நகங்களில் விரிசல்கள் மற்றும் அவை வலுவிழந்து இருப்பதை உங்களால் கவனிக்க முடியும்.

வாயில் புண்கள் 

வாயில் புண்கள் ஏற்படுவது நமது உடலில் வைட்டமின் குறைபாடு இருப்பதற்கான மற்றொரு அறிகுறி. வைட்டமின் B12, இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்களில் குறைபாடு இருந்தால் வாயில் புண்கள் மற்றும் வீக்கம் ஏற்படும். இந்த குறைபாடுகள் நமது உடலின் திசுக்களை ஆற்றும் திறனை குறைக்கிறது. 

தலைமுடி உதிர்வு 

பயோடின், வைட்டமின் D மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாடு அளவுக்கு அதிகமான தலைமுடி உதிர்வு, தலைமுடி உடைந்து போவது மற்றும் மெதுவான முடி வளர்ச்சி போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். இந்த குறைபாடுகள் வழக்கமான தலைமுடி வளர்ச்சி சுழற்சியை சீர்குலைத்து அதனால் தலைமுடி உதிர்வு ஏற்படும். 

சருமத்தில் தடிப்புகள்

வைட்டமின் B7, வைட்டமின் B12 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் குறைபாடு இருந்தால் சருமத்தில் எரிச்சல், சிவத்தல் மற்றும் அரிப்பு மிகுந்த தடிப்புகள் ஏற்படும். இந்த குறைபாடுகள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதித்து அதனால் அசௌகரியம் உண்டாகும். 

இதையும் படிக்கலாமே:  உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுவதுமாக கிடைப்பதற்கு இந்த சமையல் முறையை பின்பற்றுங்கள்!!!

இரவு நேரத்தில் பார்வைத் திறன் குறைதல் 

இரவு நேரத்தில் பார்வை திறனில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அது வைட்டமின் குறைபாட்டிற்கான ஒரு முக்கியமான அறிகுறி. வைட்டமின்களின் குறைபாடு கண்களில் உள்ள ரெட்டினாவின் ஆரோக்கியத்தை மோசமாக்கும். இதனால் குறைவான வெளிச்சத்தில் பார்ப்பதில் சிக்கல் மற்றும் மாலைக்கண் பிரச்சனை ஏற்படலாம். 

எனவே இந்த மாதிரியான அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாட்டையும் ஆரம்பத்தில் கண்டுபிடித்து அதனை ஈடுகட்டுவதற்கு மருத்துவரின் உதவியை நீங்கள் பெறலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Harish Kalyan new Pan India movie ஹரிஷ் கல்யாணுடன் இணையும் பாலிவுட் நடிகர்..ஆஹா மஜா கூட்டணியா இருக்கே ..!
  • Views: - 89

    0

    0

    Leave a Reply