ஆரோக்கியத்தில் மாயம் செய்யும் மஞ்சள் மிளகு பால்!!!

Author: Hemalatha Ramkumar
8 June 2023, 4:21 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களில் பால், மிளகு மற்றும் மஞ்சள் ஆகியவை நிச்சயம் இருக்கும். இந்த மூன்று பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கக்கூடிய மஞ்சள் மிளகு பால் அதிகப்படியான நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.

ஏனெனில் இயற்கையாகவே மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. இதற்கு காரணம் மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள் ஆகும். மிளகு அதிகப்படியான மருத்துவ குணங்கள் கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததாகும். இதனை எவ்வாறு தயார் செய்வது மற்றும் இவற்றின் நன்மைகளை பற்றி இங்கே காண்போம்.

தேவையான பொருட்கள்:
பால் 150 மில்லி
மிளகு தூள் 5 கிராம்
மஞ்சள் தூள் தேவையான அளவு

பாலை நன்கு சூடாக்கி முதலில் மஞ்சள் பொடியை கலக்க வேண்டும். பின்பு மிளகுத்தூளை சேர்த்து 100 மில்லியாக குறையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்பு குடிக்கக்கூடிய வெதுவெதுப்பான சூட்டுடன் அருந்த வேண்டும்.

மஞ்சள் மிளகு பால் அருத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் வைரஸ் பாக்டீரியா போன்ற தொற்றுநோய் கிருமிகளின் அபாயத்தை குறைக்கிறது.
வீக்கம் மற்றும் மூட்டு வலியை குறைக்க உதவுகிறது.

இதில் அதிகப்படியான கால்சியம் உள்ளதால் எலும்புகள் வலிமையாகவும் அடர்த்தியாகவும் இருக்க உதவுகின்றது. மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதனால் அது சிறந்த கிருமிநாசினியாகச் செயல்படுகின்றது.
நாள்பட்ட சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மஞ்சளுக்கு புற்று நோய் செல்களை அழிக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது. எனவே புற்றுநோய் அபாயத்திலிருந்து காக்கிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் கடுமையான வயிற்றி வலியைக் குறைக்கிறது.
கீல்வாதம், முடக்குவாதம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளது.
மிளகு உடல் வெப்பத்தை அதிகரிக்க கூடியது. எனவே குளிர்ச்சியால் ஏற்படக்கூடிய சைனஸ், நெஞ்சு சளி போன்ற பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வளிக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 260

0

0