பால் கூட இத கலந்து சாப்பிட்டா ஒரே மாசத்துல உடல் எடை அதிகரித்து புசு புசுன்னு மாறிடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
8 June 2023, 12:01 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

அதிகப்படியான உடல் பருமன் என்பது தற்போது பலருக்கு இருக்கக்கூடிய பொதுவான பிரச்சனையாகும். எனவே பலரும் உடல் எடையை குறைப்பது பற்றியே பலரும் ஆலோசிக்கிறார்கள். அதனை பற்றிய உணவு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி நாம் அன்றாடம் பத்திரிகை அல்லது தொலைக்காட்சியில் பார்க்கிறோம். ஆனால் உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சனையும் உள்ளது.

ஊசிகள் மற்றும் மாத்திரைகள் பயன்படுத்தி உடல் எடையை கூட்டுவதால் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. ஆகவே இந்த பதிவில் எதையும் பயன்படுத்தாமல் இயற்கையாகவே நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மூலம் எளிதில் உடல் எடையை கூட்டுவது எப்படி என்று காண்போம்.

தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். கலோரிகள், விட்டமின்கள், புரதங்கள், நல்ல கொழுப்புகள் மற்றும் அதிகப்படியான நார்ச்சத்துகள் அதிகமாக, அடங்கியுள்ள உணவு பொருட்களை சரியாக கண்டறிந்து உண்டால் ஒரே வாரத்தில் உங்கள் உடல் எடையை அதிகரித்து விட முடியும்.

தினமும் காலையில் 100 கிராம் அளவிற்கு ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலை மற்றும் முளைகட்டிய பச்சைப்பயிறு ஆகியவற்றை உண்ண வேண்டும். இதில் அதிகப்படியான புரோட்டின், நார்ச்சத்துகள், விட்டமின்கள் மற்றும் கலோரிகள் அடங்கியுள்ளன. பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற உலர் பருப்பு வகைகளில் அதிகப்படியான புரதம் நிறைந்துள்ளது.

ஒரு கிளாஸ் பசும்பாலில் நாட்டுக்கோழி முட்டை கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும். இறால், மீன் போன்ற கடல் உணவுகளில் அதிகப்படியான ஊட்டச்சத்தும், அத்தியாவசிய அமிலங்களும், கால்சியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இவற்றை வாரத்தில் இரு முறை நிச்சயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இது நமது உடலில் கலோரிகளை தக்க வைத்து, உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்கிறது.

அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் நிறைந்துள்ள வேர்க்கடலையை உணவு பொருட்களில் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் பாலில் அதிக அளவு டயட் எண்ணெய்கள் நிறைந்துள்ளது. தேங்காய் பாலில் செய்த உணவுப் பொருட்களில் அதிக கலோரிகள் இருக்கும். எனவே இதனை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.

ஒரு கிளாஸ் பாலில் 50 கிராம் அளவிற்கு பேரிச்சம் பழத்தை கலந்து தினமும் குடித்து வந்தால், பேரிச்சை பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் கலோரிகள் உடல் எடையை கூட்டுகிறது.

எள்ளு மற்றும் உளுந்து ஆகியவை உடல் எடையை அதிகரிக்க செய்யகூடியவை. எள்ளுச்சட்னி, எள்ளுத்துவையல், போன்ற எள்ளு கலந்த உணவு பொருட்கள் மற்றும் உளுந்து பருப்பு சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 270

0

0