பழுப்பு நிற அரிசியை சமைப்பது எப்படி…???

Author: Hemalatha Ramkumar
28 January 2023, 12:12 pm
Quick Share

பல ஆண்டுகளாக வெள்ளை அரிசி பிரதான உணவாக உண்ணப்பட்டு வருகிறது. இருப்பினும், பிவுன் ரைஸ் என்று சொல்லப்படும் பழுப்பு நிற அரிசியின் பக்கம் பலர் தற்போது திரும்பி உள்ளனர்.

பழுப்பு அரிசி தானியமானது மற்ற வகைகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே பதப்படுத்தப்படுகிறது. எனவே, நீங்கள் அதிக ஊட்டச்சத்துக்களைப் பெறுவீர்கள். அதற்கு மாறுவது பற்றி நீங்கள் முடிவு செய்திருந்தால், பழுப்பு அரிசியை எப்படி சமைக்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்!

பழுப்பு அரிசியை சமைப்பது எப்படி?
1. ஒரு கப் பழுப்பு அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள்.

2. அரிசியை நன்றாகக் கழுவி அலசவும். பிறகு, கழுவிய அரிசியை பிரஷர் குக்கரில் மாற்றவும்.

3. அரிசியை அளந்த அதே பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றவும். (1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர்).

4. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 1/3 தேக்கரண்டி உப்பு சேர்க்கவும். நன்கு கிளறி, பிரஷர் குக்கரை மூடவும்.

5. மிதமான தீயில் 8 விசில் விட்டு வேக வைக்கவும்.

6. 8 விசில் வந்ததும், அடுப்பை அணைத்து, குக்கரை ஆற விடவும்.

7. குக்கரில் பிரஷர் இறங்கியதும் கவனமாக திறக்கவும்.

8. அரிசி 8 விசில்களில் நன்றாக வேகவில்லை என்றால், 1/3 கப் தண்ணீர் சேர்த்து மேலும் 2 விசில் வரும் வரை சமைக்கலாம்.

9. பிரவுன் ரைஸ் இப்போது பரிமாற தயாராக உள்ளது.

Views: - 566

0

0