காரணமே இல்லாமல் இளையராஜா என்னை நிராகரித்தார்.. மேடையில் கண்கலங்கிய விஜய்சேதுபதி பட இயக்குனர்.!

Author: Rajesh
18 June 2022, 1:41 pm
Quick Share

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமனிதன். வருகிற 23ம் தேதி வெளியாகவுள்ளது. ஆர்.கே.சுரேஷ் வெளியிடுகிறார். இப்படத்தில் முதல்முறையாக இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

இதில் கலந்து கொண்டு இயக்குனர் சீனுராமசாமி பேசியதாவது: மாமனிதன் படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்ததே இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இந்த விஷயத்தை அவர்கள் விஜய் சேதுபதியிடம் சொல்ல அவர் என்னிடம் சொன்னார். முதலில் இளையராஜா, யுவன்சங்கர்ராஜா, கார்த்திக்ராஜா இணைந்து இசை அமைப்பதாக இருந்தது. பின்னர் அவர்கள் தான் கார்த்திக்ராஜாவை நீக்கிக் கொண்டார்கள்.இப்படத்தின் ஒப்பந்தத்தின் போதே அவர்களுக்குப் பிடித்த கவிஞர்களுடன் தான் அவர்கள் வேலை செய்வார்கள் என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள். நான் சிபாரிசு செய்த கவிஞர்களை அவர்கள் ஏற்கவில்லை.

நானும் விட்டுவிட்டேன். ஆனால் என் மீது இளையராஜாவுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. காரணமே இல்லாமல் என்னை நிராகரித்தார். பாடல் இசைக்கும், பின்னணி இசை கோர்ப்புக்கம் என்னை அழைக்கவில்லை.

என்னிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை. நான் இந்த படத்தின் இயக்குனர், எனக்கு அதற்குரிய அங்கீகாரம் தரப்படவில்லை என கண் கலங்கினார். சிலர் இதற்கு கார்த்திக்ராஜா தான் காரணம் என்றார்கள். நான் நம்பவில்லை, காரணம் அவர் நான் இயக்குனராவதற்கு முன்பே நண்பர், என் படத்தில் தொடர்ந்து வைரமுத்து தான் பாடல்கள் எழுதியுள்ளார்.

யுவன்சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்துகூடத்தான் பாடல் எழுதியுள்ளார்கள். ஆனால் நான் மட்டும் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும். இது என்ன நியாயம், படத்தின் புரொமோஷனுக்குக் கூட இளையராஜாவும், யுவனும் வரவில்லை. யுவன் மீது எந்தத் தப்பும் இல்லை, அவர் பாவம். அவர் அப்போது எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தார். இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 453

0

0