தமிழகத்தில் வேறு மொழி படங்களுக்கு அதிகரிக்கும் முக்கியத்துவம் : நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆதங்கம்..!

Author: Rajesh
3 May 2022, 7:59 pm
Quick Share

மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘விசித்திரன்’. மலையாளத்தில் பாராட்டுகளும் வெற்றியையும் குவித்த இந்தக் க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் விசித்திரன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரபல தயாரிப்பாளரும்இ நடிகருமான ஆர்.கே.சுரேஷ்இ கதாநாயகனாக நடித்துள்ளார்.ஆர்.கே சுரேஷ் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் மே 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷ் ட்டுவிட்டர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது. தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் 60 சதவீதம் தமிழ் படங்கள் தான் திரையிடப்பட வேண்டும். 40 சதவீதம் மற்ற மொழி படங்கள் வெளியாகலாம் என தயாரிப்பாளர் சங்கத்தில் விரைவில் முடிவு செய்ய போவதாக தெரிவித்தார்.

சிறு படங்களுக்கு இப்போது குரல் கொடுக்க முடியாவிட்டால் என்றைக்கும் குரல் கொடுக்க முடியாது என்றார். மேலும் இது போன்ற சூழலில் குரல் கொடுக்கும் போது தான் கவனம் கிடைக்கும். எனவே 60சதவீதம் திரையரங்குகள் மாநில மொழிப்படங்களுக்கு கிடைக்க வேண்டும். இதை கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் செய்ய முடியாது.

எனில் தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்கள் இளிச்சவாயர்கள் கிடையாது. எல்லா திரையரங்குகளுக்கும் நான் சொல்லிக்கொள்கிறேன். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான் திரையரங்கு உரிமையாளர்கள் நன்றாக இருக்க முடியும். இல்லா விட்ட எல்லா தயாரிப்பாளர்களும் ஓடிடியில் படத்தை ஆரம்பித்து விடுவார்கள். எனவே தமிழ் மொழி படங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Views: - 762

1

0