ஒரு மாதத்தில் 11 வழக்குகள்..! கான்பூரை காவு வாங்கும் லவ் ஜிகாத்..! சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு..!

15 September 2020, 8:28 pm
UP_police_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் லவ் ஜிஹாத் வழக்குகளை விசாரிக்க கான்பூர் காவல்துறை எட்டு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் உத்தரபிரதேசத்தின் கான்பூரில் லவ் ஜிகாத் மூலம் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட 11 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுபோன்ற வழக்குகளை அடுத்து, இந்து அமைப்புகள் கான்பூர் ஐஜி மோஹித் அகர்வாலை சந்தித்து இந்த விவகாரம் குறித்து விசாரணை கோரியது. கான்பூர் (தெற்கு) காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் புக்கர் தலைமையில், இந்த சம்பவங்களுக்குப் பின்னால் ஏதேனும் நெட்வொர்க் அல்லது கும்பல் இருக்கிறதா என்றும், கான்பூரில் லவ் ஜிஹாத் மோசடிக்கு நிதியளிப்பதில் இஸ்லாமிய அமைப்புகளின் பங்களிப்பு குறித்து விசாரிக்கவும் எஸ்.ஐ.டி. அமைக்கப்பட்டுள்ளது.

“இதுபோன்ற தேசிய விரோத செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு சில அமைப்புகளுக்கு சில இஸ்லாமிய அமைப்புகள் நிதி உதவி வழங்குவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது” என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

லவ் ஜிஹாத் வழக்குகளில் பெரும்பாலானவை ஜூஹி பகுதியிலிருந்து வெளிவந்துள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதியுதவி அளிக்கப்படுகிறதா என்பதை அறிய கான்பூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

எஸ்பி தீபக் புக்கர், இதற்கிடையில், கண்காணிப்பு நோக்கத்திற்காக ஒரு சிறப்பு ஸ்வாட் குழுவின் உதவியை நாடியுள்ளதாகக் கூறினார்.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படும் அனைத்து லவ் ஜிஹாத் வழக்குகளின் விவரங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு உள்ளூர் காவல் நிலையங்களை எஸ்ஐடி கேட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இணைப்புகளை சரிபார்க்க குழு ஒரு டஜன் தொலைபேசி எண்கள் தொடர்பான பதிவுகளில் செயல்பட்டு வருவதாக புக்கர் மேலும் தெரிவித்தார்.

அத்தகைய தம்பதிகள் மற்றும் அவர்களது வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களையும் இந்த குழு சேகரித்து வருகிறது. மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அறிக்கைகளையும் எடுத்து வருகிறது. அவர்களின் உதவியாளர்களின் தொலைபேசி எண்களையும் பிரித்தெடுக்கிறது.

இதனால் உத்தரப்பிரதேசத்தில் விரைவில் லவ் ஜிகாத் தொடர்பாக மிகப்பெரிய அளவில் நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0