என் மாமியார் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்! எதுக்கு தெரியுமா?

22 January 2021, 8:57 am
Quick Share

திருமணம் முடிந்த வீட்டிற்கு வந்த மருமகனுக்கு, 125 வெரைட்டியில் உணவு பரிமாறி அசத்தியிருக்கிறார் இந்த பாசக்கார மாமியார். ஆந்திராவில் நடந்த இச்சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் தான் ஊர் மெச்சும் மாமியார் என நெட்டிசன்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

மாமியார்- மருமகன் உறவு என்பது தாய் – மகன் உறவு போன்றது. மருமகன் வீட்டிற்கு வரும்போதெல்லாம் தடபுடல் விருந்து வைத்து கவனித்து அனுப்புவது மாமியாரின் தலையாய கடனாகவே கொண்டிருக்கிறார்கள். இது எதற்கு தெரியுமா? தன் மகள் பிறந்த வீட்டில் எப்படி இருந்தார் பாருங்கள். அதுபோல் புகுந்த வீட்டிலும் அவருக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என மருமகனுக்கு புரியும் வகையில் உபசரிப்புகள் தூள் பறக்கும்.

அப்படி ஒரு சம்பவம் தான் ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தை சேர்ந்த ஒரு மாமியார், தனது மருமகன் திருமணம் முடிந்து விருந்துக்கு வந்தபோது, 125 வெரைட்டியில் உணவுகளை சமைத்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதையடுத்து, ஊரே மெச்சும் அளவுக்கு பேசப்படுகிறார் ஒரு மாமியார். வீடியோவில், தனது மனைவியுடன் அமர்ந்தபடி, ஒவ்வொரு வெரைட்டியாக எடுத்து ரசித்து சாப்பிடுகிறார் அந்த கொடுத்து வைத்த மருமகன். தனது மனைவிக்கும் அந்த புதுமாப்பிள்ளை ஊட்டி விட, அவர் வெட்கத்துடன் வேண்டாம் என மறுக்கிறார். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களின் ரியாக்சன் தான், அதகளமாக இருக்கிறது. என் மாமியார் மற்றும் மனைவியின் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மாமியார் அமைவதெல்லாம் அவனவன் செய்த பயன்! என்ன நான் சொல்றது…

Views: - 0

0

0